தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இறக்குமதியாளர்களை பதிவு செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – வர்த்தக அமைச்சு

0 440

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சு அனுமதியளிக்கும் என வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுத்து துறைமுகத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சரக்கு கொள்கலன்களை நாளை (21) முதல் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.