தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இலங்கை தந்தை

0 401

40 வயதுடைய இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இலங்கையர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு 6 வயதும் சிறுமிக்கு 4 வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

40 வயதான இந்திக்க குணதிலக்க என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் வேறு நபர்கள் தொடர்புபடவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸ் உயர்அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சூழ்நிலைகள் முழுமையாக ஆராயப்படும், இதற்கு சிறிது நேரம் எடுக்கும், ஆனால் இந்த கட்டத்தில் நான் உங்களுக்கு சொல்கிறேன், இந்த சம்பவத்தை நாங்கள் இரட்டை கொலை தற்கொலையாக கருதுகிறோம்,

என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.