தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இரு இலங்கை பிரஜைகளுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடை – புதிய அறிவிப்பு

0 126

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் மேலும் இரண்டு இலங்கை பிரஜைகளுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இலங்கை கடற்படையின் புலனாய்வு அதிகாரியான சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் 2008ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், 11 சிறுவர்கள் காணாமல் போனமை தொடர்பில் குறைந்தது எட்டு குழந்தைகளின் சுதந்திர உரிமையை மீறிய குற்றச்சாட்டில் சந்தன ஹெட்டியாராச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2000 டிசம்பரில் விசாரணையின்றி எட்டு தமிழ் கிராம மக்களை கொடூரமான முறையில் கொன்ற வழக்கின் கீழ் சுனில் ரத்நாயக்கவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

2021 உலக மனித உரிமைகள் தினத்தன்று இந்த ஜோடி, சீனா மற்றும் பெலாரஸைச் சேர்ந்த 10 பேருடன் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.