தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட நபர் மரணம்

0 96

குருவிட்ட, கொக்கோவிட்ட பிரதேசத்தில் இரும்பு கம்பியால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் வசித்து வந்த குறித்த நபர் கடத்தப்பட்டு, வேறு வீட்டில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

வீ்டு ஒன்றில் வைத்து நபர் ஒருவர் தாக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து குருவிட்ட பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை நேற்று (21) ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து தாக்கப்பட்ட நபரை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், காயமடைந்த நபரை இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் பரங்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட பகையே தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.