Developed by - Tamilosai
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விவாதிக்க இரு நாள் பாராளுமன்ற விவாதத்தை ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உள்ளது. ஆனால், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எந்தவிதமான விளக்கங்களையும் பாராளுமன்றத்துக்கு வழங்கவில்லை என்றார்.
ஊடகங்களுக்கு பசில் கருத்துக்களை கூறுகிறார். ஆனால் பாராளுமன்றத்தில் எதனையும் அவர் கூறுவதில்லை. எனவே இது தொடர்பில் இருநாள் பாராளுமன்ற விவாதம் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்