Developed by - Tamilosai
இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால், இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் 10.59 மணி வரை உறங்குவதுடன் ஒப்பிடும்போது இரவு 11 மணி முதல் 11.59 மணிவரை 12 விகிதத்திற்கும் அதிகளவிலான ஆபத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரவு 10 மணிக்கு முன்னர் உறங்கினால் இதய நோய் வருவதற்கான 24 விகிதத்திற்கும் அதிகளவிலான ஆபத்து இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நள்ளிரவில் அல்லது அதற்குப் பின்னர் தூங்குவதால் இருதய நோய்க்கான ஆபத்து 25 வீதம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 மற்றும் 2010 இற்கு இடையில் 88 ஆயிரத்து 26 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிகரித்த இருதய ஆபத்து பெண்களுக்கு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.