Developed by - Tamilosai
திருகோணமலை கிண்ணியாவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைக்குண்டுடன் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்
கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள பூவரசாந்தீவு, ஆர்.டி.எஸ் தெருவில் வசிக்கும் 29 வயதுடைய இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இராணுவ பொறியியலாளரை சம்பவதினமான நேற்று இரவு கைது செய்ததுடன் கைக்குண்டு ஒன்றையும் மீட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிசார் மேற்கொண்டுவருவதுடன் கைது செய்யப்பட்வரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.