Developed by - Tamilosai
இலங்கையில் தற்போது நடக்கும் நிலவரங்களின்படி இராணுவ ஆட்சி ஒன்றை திரைமறைவில் அரங்கேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் இடைக்கால இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவக் கூடிய ஏது நிலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவின் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.
தற்போது மஹிந்தவுக்கு ஆதரவான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பெருந்தொகை இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் செயற்பாடுகள் மிகவும் பாரதூரமான சம்பவம் ஒன்று நடப்பதற்கான ஒத்திகையாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அரசியல் ரீதியாக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் இராணுவ ஆட்சிக்கான ஆட்டத்தை கோட்டபாய ஆரம்பிப்பார் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது