தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் வைத்தியசாலையில்!

0 216

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் எனும் ஊடகவியலாளர் மீதே இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்த போது , அங்கிருந்த இராணுவத்தினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.   அவர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தியதுடன் , தான் இராணுவ முகாமையோ , இராணுவத்தினரையோ புகைப்படம் எடுக்கவில்லை என கூறிய போதிலும் இராணுவத்தினர் அவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.