Developed by - Tamilosai
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் அரசு போதிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சனிக்கிழமை அன்று கொழும்புவில் நடந்த ஆர்ப்பாட்டம் இரவிலும் தொடர்ந்தது.
கொழும்பு நகரத்தின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான காலி முகத்திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக வலைதளங்களின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக, சுமார் ஒரு மில்லியன் பேரை திரட்ட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர்.
சனிக்கிழமை காலை 9 மணி முதலே மக்கள் மெல்ல மெல்ல காலி முகத்திடலில் கூட ஆரம்பித்தார்கள். நண்பகலில் கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்டவர்கள் காலி முகத்திடலில் கூடியிருந்தனர்.