தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இரத்தக்கறையை மீண்டும் பார்க்கும் முயற்சி – ரோஹினி குமாரி கவிரத்ன

0 141

தற்போதைய ஆட்சியாளர்கள் இரத்தக்கறையை மீண்டும் பார்க்கும் மனநிலையை உருவாக்கவே முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று, அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“உலக நாடுகளில் யுத்த நினைவுத்தூபிகளை அகற்றி அன்பை வளர்க்கும் சூழலில், இங்கு யுத்த நினைவு சின்னங்களை உருவாக்கி இன விரோதத்தையும், கோபத்தையும் உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

நாட்டில் யுத்தமோ அல்லது இன முரண்பாடுகளோ இல்லை என்பதே அரசாங்கத்திற்கு இருக்கும் பாரிய பிரச்சினையாகும்.

“சமூக அபிவிருத்தியை விட பாதுகாப்பு படைகளின் தேவைக்காக அதிக நிதி ஒதுக்கப்படும் என்றால் அது மரணத்தை நெருங்கும்” என மார்டின் லூதர் கிங் கூறியுள்ளார்.

இந்த வாக்கியங்களை ராஜபக்ஷ அரசாங்கம் சரியென நிருபித்து வருகின்றது. முழு வரவு செலவு திட்டத்திலும் 14.9 வீத நிதி பாதுகாப்பிற்கு எதற்கு? மிக் ஊழல் போன்று இன்னொரு ஊழலில் ஈடுபடவா இந்த நிதி என்ற கேள்வியே எழுகின்றது” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.