Developed by - Tamilosai
நாளை முதல் இரண்டு மாதங்களுக்கு நுரைச்சோலை அனல்மின் நிலையம் பராமரிப்பு பணிகள் நிமித்தம் மூடப்படவுள்ளது .
பராமரிப்புப் பணிகள் முடிவடைவதற்கு சுமார் 75 நாட்கள் தேவைப்படுவதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தேசிய மின்கட்டமைப்புக்கு நுரைச்சோலை அனல்மின் நிலையம் ஊடாக நாளாந்தம் 270 மெகாவோட் மின்சாரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது தேசிய மின்கட்டமைப்புக்கு சுமார் 300 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையத்தை மூடும் நடவடிக்கையானது நாட்டில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த நிலையில் நாட்டின் மின் நெருக்கடியை தோற்றுவிக்கும் என கருதப்படுகிறது.