Developed by - Tamilosai
மட்டக்களப்பு – ஏறாவூரில் இரண்டு இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி இன்று சனிக்கிழமை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி தாக்கும் வகையிலான காணொலி வெளியாகி நேற்றுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிக்குத் தாக்குதல் நடத்த எந்த உரிமையும் இல்லை எனத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் , சரத் வீரசேகர, இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.