Developed by - Tamilosai
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஒரு வருட காலத்தில் 6 வீடுகளில் திருட்டில் ஈடுபட்டதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது சந்தேக நபர் கடந்த 2021ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடைக்கால பகுதியில் 6 வீடுகளில் தங்க நகைகள், பணம் என்பவற்றை திருடியதாகத் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்முறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மட்டும் மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.