Developed by - Tamilosai
நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய இயற்கை அனர்த்தங்களால் கடந்த 27ஆம் திகதி முதல் இன்று(செவ்வாய்க்கிழமை) வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 7167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.