தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இம்மாத இறுதியில் ஸ்கொட்லாந்து பயணமாகிறார் கோட்டாபய

0 227

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான க்ளாஸ்கோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இம்மாத இறுதியில் ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள கொப் – 26 மாநாடு அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.

இரசாயன உரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள், சேதன இயற்கைப் பசளைக்கு வழங்கிய முக்கியத்துவம் மற்றும் இயற்கை சார்ந்த விடயங்களில் இலங்கை கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான நிலைப்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும் க்ளாஸ்கோ மாநாட்டிற்கான ஜனாதிபதியின் விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இம்மாத இறுதியில் அங்கு செல்வார் என்று ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.