Developed by - Tamilosai
வவுனியா வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கண்டனப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
மதவாச்சியிலுள்ள 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரிவில் இணைத்து இன விகிதாரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் நிலத்தையும், இருப்பையும் காக்க தமிழ் மக்களை குறித்த போராட்டத்தில் ஒன்றிணையுமாறும் அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.