தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன அழிப்பின் மூலம் போர் முடிவு – செல்வராசா கஜேந்திரன்

0 205

இன அழிப்பின் மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், முன்கொண்டு வரப்பட்ட அனைத்து பாதீடுகளிலும், தமிழர் தேசம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று பாதீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், இனஅழிப்பின் பின்னர் இலங்கை துாய சிங்களத் தீவாக மாறும் என்ற எண்ணம் இன்று மாறி, இலங்கையின் சொத்துக்கள் சீனா உட்பட்ட நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் தொிவித்தார்.

சமஸ்டி கொடுத்தால், நாடு பிளவுபடும் என்ற காரணத்தைக் காட்டி சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை துாண்டி, ஆட்சி பீடம் ஏறிவந்த அரசாங்கங்கள், தமிழர்களை ஒடுக்கி வந்தன.

இந்தநிலையில் தீர்வுகளுக்காக முன்வைக்கப்பட்டுள்ள 13ம் திருத்தம் மற்றும் ஒற்றையாட்சி தீர்வுகளை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், ”தமிழர் தேசமும் சிங்கள தேசமும் ஐக்கியமாக வாழ வழிவிடுங்கள்” என்று கோரிக்கை விடுத்தார்.

2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர் இன்று இந்த நாட்டில் எதுவுமே மிஞ்சவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

”தேசியக்கொடியில் சிங்கத்தைக் கொண்டிருக்கிறீா்கள் என்பதற்காக நீங்கள் சிங்கங்களோ அல்லது சிங்கங்களின் தலைகளோ அல்ல. நீங்கள் சிங்கத்தின் வாலில் உள்ள உரோமம் மாத்திரமே என்று கஜேந்திரன் குறிப்பிட்டார். 

Leave A Reply

Your email address will not be published.