தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 93

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மன நிறைவை தரக்கூடிய நாளாக இருக்கும். ராசியில் குருவும், 5ல் சந்திரனும் இருக்கக்கூடிய குரு சந்திர யோகம் ஏற்படுவதால் நீங்கள் எடுத்த காரியங்களில் நல்ல வெற்றியை பெற்றிடலாம். 12ல் இருக்கும் ராகு அலைச்சல், செலவுகளைக் கொடுத்தாலும் சாதக பலன்களே கிடைக்கும். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்ய தடங்கல்கள் விலகும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தன லாபங்கள் உண்டு. வழக்கு, விசாரணைகள் இருப்பின் அது உங்களுக்கு சாதகமாக முடியும். அரசு அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு லாப கரமான நாளாக இருக்கும். மாலை நேரத்தில் நல்ல செய்திகள் காத்திருக்கிறது. 4ல் இருக்கும் சுக்கிரன், சந்திரனின் சஞ்சாரம் சகோதர, சகோதரிகளின் ஒற்றுமையை மேம்படுத்தும். விநாயகர் வழிபாடு செய்யவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவு கிடைக்கும். சந்திரன், சுக்கிரன் 3ம் இடத்தில் இருப்பதால் பெற்றோரின் ஆசி கிடைக்கும். தொழில் சம்பந்தமான சில பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும். நண்பர்களுடன் உல்லாசமாக இரவைக் கழிப்பீர்கள். வியாபாரத்தில் சிறிய லாபத்திற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து பெறுவீர்கள்.
ஏகாதசி திதியும் கூடியிருக்கக்கூடிய இன்றைய நாளில் பெருமாள் ஆலயத்தில் கருடன் வழிபாடு செய்யவும். உங்களின் செயல்பாடுகளில் நல்ல வெற்றி கிடைக்கும்

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசி நாதன் சந்திரன் 2ம் இடமான வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். இதனால் உங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை. இன்று பாக்கியத்தில் இருக்கும் ராகுவால் மன அமைதியும், பித்ருக்களின் ஆசியும் பெறலாம். செவ்வாய் கிழமையான இன்று பெருமாள் கோவில் வழிபாடும், சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும். எதிரியின் விமர்சனத்திற்கும் கவனம் செலுத்த வேண்டியதில்லை. பிள்ளைகள் செயல்பாட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள்

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சுக்கிரன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களின் சஞ்சாரம் உங்கள் ராசியில் இருப்பதால் மனக்குழப்பம் உண்டாக வாய்ப்புள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சந்திரன் ராசியில் இருப்பதால் குழப்ப மன நிலை இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, வாக்குவாதங்களை விலக்கி வைப்பது நல்லது.
விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடவும். குழப்பம் தீரும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ராசியில் இருக்கும் கேது உங்களுக்கு வண்டி, வாகன யோகத்தை அளிப்பார். செவ்வாய்க் கிழமையான இன்று அலைச்சல்கள் இருக்கும். இருப்பினும் அது உங்களுக்கு நிதி லாபம், வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும். இன்று சுப காரியங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்கள் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதற்கான தீர்வு காண்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மன நிறைவு தரக்கூடிய நாள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நீண்ட தூர பிரயாணங்கள் ஒரு சிலருக்கு ஏற்படும். மனதளவில் இருக்கும் குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். உங்கள் தொழிலின் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வணிகத்தின் முன்னேற்றத்தைக் கண்டு உற்சாகமாக இருப்பீர்கள். ஒரு மூத்த நபரின் ஆலோசனையைப் பெற விரும்பினால், தயக்கமின்றி அதைச் செய்யுங்கள், உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வழியைத் திறக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று காலை வேளையில் கடன் தொல்லை தீர்வதற்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய நண்பர்கள் மூலம் வெற்றிகள் உண்டு. கலைஞர்களுக்கு ஏற்ற நாள்.

விநாயகர் வழிபாடு, பால் அபிஷேகம் செய்வதால் எடுத்த காரியத்தில் மன ஆறுதல், வெற்றி கிடைக்கும்.
உழைக்கும் நபர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு தேவைப்படும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சில ஏமாற்றங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம், இது உங்கள் கவலையை அதிகரிக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிம்மதி கிடைக்கும். நீண்ட தூர பயணம் ஒரு சிலருக்கு உண்டாகும். இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இதனால் காலையில் விநாயகருக்குப் பாலபிஷேகமும், ஆலயங்களுக்கு பச்சரிசி தானமும் செய்யலாம். வீட்டில் மற்றும் வியாபாரத்தில் சிறிது கவனம் செலுத்துவீர்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்கள் துணையின் ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று திருவோணம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது. அதனால் எந்த ஒரு செயலையும் கவனமாக செய்வதோடு, முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.

சொத்து சார்ந்த விஷயங்களில் லாபகரமான ஒப்பந்தமாக இருக்கும். நீங்கள் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் மென்மையாக இருக்கும். இன்று அரிசி தானம், அன்ன தானம் செய்வது நல்லது. விநாயகர், பெருமாள் வழிபாடு செய்வது நல்லது.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் எடுத்த காரியத்தில் வெற்றி, மனக்குழப்பம் தீரக்கூடிய அற்புதமான நாளாக அமையும். உங்களுக்கு நாள் முழுவதும் அலைச்சல் இருந்தாலும், வேலைகளை முடித்துவிடக்கூடிய தைரியமும், திருப்தியும் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்கள் குடும்பம், சகோதர, சகோதரிகளால் மனக்குறை ஏற்படக்கூடிய நாள். சுக்கிரன், சந்திரன் சேர்ந்து 6ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்திற்காக அதிக செலவு செய்யக்கூடிய சூழல் இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தினருக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வணங்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.