தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 61

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல்நிலையில் மேம்பட்டு மகிழ்ச்சியடைவீர்கள். நீங்கள் வியாபாரத்தில் சில புதிய நபர்களின் உதவி கிடைக்கும். அவர்கள் உங்கள் தொழிலை முன்னோக்கிக் கொண்டு செல்ல உதவியாக இருப்பார்கள். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு இன்று எளிதாகக் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் வேலையில் வெற்றி பெறுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பணிபுரிபவர்கள் இன்று சில புதிய நபர்களின் அறிமுகம் பயனுள்ளதாக இருக்கும். இது அவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற உதவும். குடும்பத்தில் சில பதட்டமான சூழல் ஏற்படலம. உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் கடுமையான வார்த்தைகள் உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்ய வேண்டும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சமூகத்தில் ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்குவீர்கள். உங்கள் சமூக வட்டமும் அதிகரிக்கும். சமூக பணிகளுக்காக பணத்தை செலவிட வாய்ப்புள்ளது. பணம், முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. முதலீடுகளை தவிர்க்கவும். மாணவர்கள் ஆசிரியர்களின் நல்லாதரவைப் பெறுவீர்கள். தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இன்று வணிகம் உங்களுக்கு ஓரளவு நிதி நன்மைகளைத் தரும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தடைப்பட்ட வேலைகள் உங்களின் நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலும், திருமண வரனை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல திருமண வரனும் வர வாய்ப்புள்ளது. வியாபாரம் தொடர்பாக நீங்கள் பயணம் செல்ல நேரிடும். உங்கள் வியாபாரத்தில் முதலீடு செய்ய சாதகமானதாக இருக்கும்.​

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வீடு, மனை என சொத்து வாங்கும் முயற்சிகளில் உங்களுக்கு நன்மை பயக்கும். இன்று நீங்கள் அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வர வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கும் என்பதால் இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் பிள்ளைகளிடமிருந்தும் சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வியாபாரத்தில் புதிய திட்டங்களைச் செயல்படுத்த நீங்கள் அவசரப்பட வேண்டியிருக்கும். உங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிட முடியாத சூழல் இருக்கும். பெற்றோரின் ஆரோக்கிய பாதிப்பு பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இன்று காதல் வாழ்க்கையில் நெருக்கமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று எந்தவொரு விவாதத்திலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது அவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் ஏதேனும் புதிய திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் தந்தை, அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் செய்யவும். இன்று குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படலாம் என்பதால் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு அது கிடைக்க காத்திருக்க வேண்டியது இருக்கும். உங்கள் சகோதரர்களுடன் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் அது தீரும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எடுக்கும் முடிவு சிக்கலை உண்டாக்கும், எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் ஆடம்பரத்திற்காகக் கொஞ்சம் பணம் அதிகமாக செலவழிக்க வேண்டியது இருக்கும். பண விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. திருமண வாழ்வில் இனிமை உண்டாகும். இன்று முக்கியமான பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய நாள். பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும். இன்று நீங்கள் பணியிடத்தில் ஒரே நேரத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் உங்களுக்கு தொல்லைகளை உருவாக்கலாம். எனவே எந்த வேலை செய்தாலும் அதை உங்கள் மனதில் நல்ல எண்ணத்துடன் செய்யுங்கள். உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய முயலவும். எதிர்காலத்தில் அதன் மூலம் நீங்கள் முழு பலன்களைப் பெறுவீர்கள். சகோதரர்களுக்குள் உள்ள தகராறு குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் அதைத் தீர்த்து வைப்பதில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாள் பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்கள் நண்பரை சந்திக்க நினைத்தால் இன்று அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவை ஆழப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் பணியிடத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், அபரிமிதமான பலன்களைப் பெறுவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் விரும்பிய லாபம் கிடைக்காததால் நீங்கள் கொஞ்சம் கவலைப்படுவீர்கள். உங்கள் பிஸியான கால அட்டவணைக்கு மத்தியிலும், உங்கள் காதல் வாழ்க்கைக்கு நீங்கள் நேரத்தை ஒதுக்க நினைப்பீர்கள். வீட்டை அழகு படுத்துவதற்காக கொஞ்சம் பணம் செலவழிக்க நேரிடும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கவனக்குறைவாக இருக்க வேண்டாம். அரசு வேலையில் தொடர்புடையவர்கள் இன்று பதவி உயர்வு பெறலாம். சிறு வணிகர்களும் இன்று பணப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் உதவுவீர்கள். இன்று குடும்பத்தில் சில குழப்பமான விஷயங்களில் ஆலோசனை தேவைப்படும்.

Leave A Reply

Your email address will not be published.