தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 95

மேஷம்

மேஷம் இன்றைய ராசி பலன்

மேஷ ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். உடல் சோர்வும் ஏற்படும். உங்களின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றியும் பெற்றோரிடம் விவாதிப்பார்.

வேலை வியாபாரத்தில் சொந்த பந்தங்கள், உடன் பணிபுரிபவர்களை நம்பக்கூடாத நாள். எதிரிகள் வேலையை கெடுக்க முயல்வார்கள்.
நீங்கள் இன்று பேசும் பேச்சு மற்றவர்களால் வேறு வகையில் எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும். இன்று உங்கள் குடும்பத்தில் சிறு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிப் பொழுதுபோக்க வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம் இன்றைய ராசி பலன்

ரிஷப ராசியினர் கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்களின் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படலாம். இதன் காரணமாக மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் சந்திக்க வாய்ப்புள்ளது. அதிக பணமும் செலவழிக்க வாய்ப்புள்ளது. இன்று முதலீடு செய்வதை தவிர்க்கவும். உங்கள் சகோதரர்களுடனான உறவில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாமியார் வீட்டு உறவில் கவனமாக நடந்து கொள்ளவும். நீங்கள் கடன் கொடுத்திருந்தால், அதை இன்று திரும்பப் பெறலாம். அக்கம்பக்கத்தினருடன் வாக்குவாதம் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம் இன்றைய ராசி பலன்

இன்று, மிதுன ராசிக்காரர்களின் மனம் அங்கும் இங்கும் அலைபாயும். மனக் குழப்பம் கொண்ட இன்றைய சூழ்நிலையில் கட்டுப்பாடாக இல்லாவிட்டால், லாப வாய்ப்பை இழக்க நேரிடும். இன்று நீங்கள் யாரிடமும் கடன் வாங்கவோ அல்லது கடன் கொடுக்கவோ வேண்டாம்.

அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள். இன்று உத்தியோகத்தில் பிரச்சனைகளை உங்களின் முயற்சியின் மூலம் தீர்க்க முடியும். சக ஊழியர்களின் உதவியால் உங்களின் கவலைகள் அனைத்தும் நீங்கும். இன்று மாலையில் சில சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்

கடக இன்றைய ராசி பலன்

கடக ராசிக்காரர்கள் இன்று மற்ற நாட்களை விட கொஞ்சம் பணம் அதிகமாக செலவாகும். இன்று மாலை உங்கள் மனைவியுடன் சிறிது நேரம் தனியாக செலவிடுவீர்கள். இன்று பிள்ளைகளின் கல்வியில் இருந்து வந்த பணப் பிரச்சனைகள் தீரும்.

புதிய வேலை தேடுதல், தொழிலைத் தொடங்க முயல்பவர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் வயிற்று வலி மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை.

சிம்மம்

சிம்மம் இன்றைய ராசி பலன்

இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏதேனும் விவாதம் ஏற்படலாம். பேச்சில் கவனமும், அனுசரித்துச் செல்வதும் அவசியம். இன்று உங்கள் குடும்ப பொறுப்புக்கள், வேலையிலும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் வேலை செய்ய வேண்டிய நாள். உங்களின் ரகசியங்களை யாரிடமும் சொல்லாதீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக வாய்ப்புள்ளது. உங்கள் தந்தையின் ஆரோக்கியம் சார்ந்த குறைபாடு உண்டாகலாம். உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கன்னி

கன்னி இன்றைய ராசி பலன்

இன்று, கன்னி ராசிக்காரர்கள் உங்கள் வேலையை முடிக்க மிகவும் தீவிரமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் தொந்தரவு செய்ய முயல்வார்கள். அரசியல் தொடர்புடையவர்கள் இன்று நல்லதரவு கிடைக்கும்.

உங்களின் தொழிலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வீட்டின் சூழல் மன வருத்தம் தருவதாக இருக்கும். குடும்பத் தொழில் செய்பவர்கள், சில முக்கிய விஷயங்கள் விவாதித்தல், முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. வீட்டின் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

துலாம்

துலாம் இன்றைய ராசி பலன்

இன்று துலாம் ராசிக்காரர்கள் புத்திசாலித்தனத்தையும், விவேகத்தையும் பயன்படுத்தி வேலையில் வெற்றி பெறுவார்கள். இன்று பணிச்சுமையும், கடின உழைப்புக்கு பின்னரே நினைத்த வெற்றி கிடைக்கும். அரசாங்க வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வேலையில் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

திருமணமானவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக செல்லும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் ஆசிரியர்களின் நல்லாதரவு கிடைக்கும். அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்

விருச்சிகம் இன்றைய ராசி பலன்

இன்று விருச்சிக ராசிக்காரர்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தடைப்பட்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். காதல் வாழ்க்கையில், உங்கள் துணையுடன் அன்பு அதிகரிக்கும்.

உங்களின் புதிய முயற்சி, செயல்பாடுகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறலாம். இன்று, உங்கள் வணிகத்தில் பணம் வரும் திட்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். திட்டங்களை ரகசியமாக செயல்படுத்த வேண்டிய நாள். இன்று வியாபாரத்தில் எந்தவித ரிஸ்க் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

தனுசு

தனுசு இன்றைய ராசி பலன்

இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய விஷயங்களை செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று பழைய நண்பரை சந்தித்து பேசி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதிக பேச்சால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பணத்தை யாரிடமும் கடனாகப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயலவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

மகரம்

மகரம் இன்றைய ராசி பலன்

மகர ராசிக்காரர்கள் கடந்த கால தவறுகளில் இருந்து இன்று சில பாடங்களைக் கற்றுக்கொள்வார்கள். கடின சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக வர ஆரம்பிக்கும். மதியத்திற்குப் பிறகு பண வரவு அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று தேவையற்ற சர்ச்சைகளில் இருந்து விலகி நிதானத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் மாமியார் தரப்பிலிருந்தும் நன்மைகளையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள்.

கும்பம்

கும்பம் இன்றைய ராசி பலன்

இன்று கும்ப ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். இன்று அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலைகளை முடிக்க முயற்சி அதிகம் தேவைப்படும். மாலையில் சில அத்தியாவசிய செலவுகள், உங்கள் பட்ஜெட்டை பாதிக்க வாய்ப்புள்ளது.

மீனம்

மீனம் இன்றைய ராசி பலன்

இன்று நீங்கள் கலவையான பலனை அனுபவிப்பீர்கள். வேலையில் கூடுதல் கவனம் தேவை. இன்று நீங்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டிய நாள். தொழில் சார்ந்த முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. உங்களின் மன உளைச்சல் குறையும். பணம் பரிவர்த்தனையில் கவனமும், யாரிடமும் வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம்.

Leave A Reply

Your email address will not be published.