தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 57

மேஷம்

மேஷம்

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நீங்கள் கவலைப்பட நேரிடும். இன்று பணிச்சுமையால் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் அன்புக்குரியவர் உங்களிடம் கோபப்பட நேரிடும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் இன்று சக ஊழியர்களின் உதவியைப் பெறுவார்கள், இது உங்கள் வேலையை எளிதாக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு சில புதிய தடைகளை உருவாக்கலாம், உங்கள் மேலதிகாரிகள் மற்றும் மூத்த உறுப்பினர்களின் உதவியால் கடின வேலைகளை கூட சமாளித்து வெற்றி பெற முயல்வீர்கள். சொத்து வாங்குதல், புதிய ஒப்பந்தங்களின் போது ஆவணங்களை சரிபார்க்கவும். உங்கள் மரியாதை இன்று அதிகரிக்கும். முன்பு எங்காவது முதலீடு செய்திருந்தால், அதன் முழு பலனையும் பெறுவீர்கள்.

மிதுனம்

மிதுனம்

உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மும்முரமாக இருப்பீர்கள். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல், திருமணம் தொடர்பான விஷயங்களை குடும்பத்தில் விவாதிக்கப்படலாம். இன்று நீங்கள் உங்கள் பெற்றோருடன் வெளியே செல்ல திட்டமிடலாம். மற்றவர்களுக்கு உதவ கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள்.

கடகம்

கடகம்

இன்று தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சில தடைகளை சந்திக்க நேரிடும். அதற்காக மூத்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டியிருக்கும். அனுபவமுள்ள ஒருவரிடமே ஆலோசனை செயல்களில் வெற்றியை தரும். இன்று குடும்பத்தின் இளைய நபர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலை ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் உற்சாகமாக இருப்பார்கள். சில முக்கிய வேலைகளுக்காக குறுகிய தூர பயணமும் செல்லலாம்.

சிம்மம்

சிம்மம்

இன்று உங்கள் குடும்பச் சொத்து தொடர்பான விஷயங்களில் முடிவு உங்களுக்கு சாதகமாக வரலாம். உங்கள் செல்வம் அதிகரிக்கும். இன்று மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். அதை நிறுத்தவும். மாணவர்கள் படிப்பு சார்ந்த விஷயங்கள் நிறைவேறும்.


கன்னி

கன்னி

இன்று எந்த வேலையைச் செய்தாலும் அதை முழு ஆர்வத்துடன் செய்து அதன் பலன்களைப் பெறுவீர்கள். இன்று அதிக வேலைகள் இருக்கும். அதை முடிப்பது குறித்து கவலை அதிகரிக்கும். சரியாக திட்டமிட்டு வேலைகளை செய்ய வேண்டும். வேலை செய்வதில் சிரமம் ஏற்படும். தொழிலில் மாற்றத்தை நினைத்தால் காண நினைப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் உறவுகளில் பிரச்சனைகளை உண்டாக்கும்.

துலாம்

துலாம்

காதல் வாழ்க்கையில் இருக்கும் பிரச்ச்னைகள் தீர்ந்து சமரசம் ஏற்படும். எந்த முடிவு எடுக்கும் போதும் அதன் நன்மை தீமைகளைக் கருத்தில் கொண்ட பின்னரே எடுக்கவும். இல்லற வாழ்வில் புதிய ஆற்றல் ஏற்படும். இன்று பணியிடம் அல்லது வீட்டிலோ ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். அதனால் பேச்சில் நிதானம் தேவை.

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று உங்கள் அலுவலகச் சூழலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். இன்று செல்வாக்கு மிக்க நபரை சந்திப்பீர்கள். இன்று உங்கள் தந்தையின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படலாம். தொழில் செய்பவர்களுக்கு உங்கள் துணையின் ஆதரவு தேவைப்படும்.

தனுசு

தனுசு

இன்று பணம் சம்பந்தமான பிரச்சனையில் நீங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தால், அதில் நல்ல தீர்வு காண்பீர்கள். வேலை வாய்ப்புக்காக உழைத்தவர்கள் தோல்வியை சந்திக்க நேரிடலாம். அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்கும் இன்று பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நண்பர்களுக்கு உதவ முன் வருவீர்கள். உயர்கல்விக்கான பாதைகளும் அமையும்.

​​​​

மகரம்

மகரம்

இன்று நீங்கள் செய்யக்கூடிய கடின உழைப்பிற்கான பலனை பெற்று மகிழ்ச்சியுடன் பெறுவீர்கள். பணியிடத்தில் தங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும், தங்கள் அதிகாரிகள் பாராட்டும் விதத்தில் பணி செய்வீர்கள். குடும்ப வாழ்க்கையில், உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்களுக்கு அலுவலகத்தில் சில சிறப்பு வேலைகள், பொறுப்புகள் ஒதுக்கப்படலாம்.

​​​

கும்பம்

கும்பம்

இன்று உங்கள் குடும்ப தொழிலுக்காக எந்த வேலை செய்தாலும் அது நிறைவேறுமா, முடியுமோ என்ற கவலை உங்களுக்கு இருக்கும். மனதில் நேர்மறையான எண்ணங்களுடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் உறவினர்களின் கஷ்டத்தை த் ஈர்க்க கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். அரசியல் செயல்பாடுகள் அதிகரிக்கும். இன்று நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்

மீனம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் எந்த ஒரு பணப்பரிவர்த்தனைகளிலும் மிகவும் கவனமாக இருக்கவும். இல்லையெனில் அது உங்களுக்கு தலைவலியாக மாறும். இன்று நீங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
இன்று எங்காவது முதலீடு செய்ய நினைத்தால், மற்றொருவரின் அழுத்தத்தின் கீழ் அதை செய்யாதீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.