தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 64

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு உகந்த நாளாக அமைகிறது. சந்திரன் மற்றும் சுக்கிரன் 5ம் இடத்தில் இருப்பதால் பிள்ளை வரம் வேண்டுவோருக்கு அதற்கான நல்ல செய்திகள் கிடைக்கும்.

முருகப்பெருமான் வழிபாட்டால் இன்று தடைகள் இல்லாத நாளாக மாற்றும். மனதளவில் இருக்கும் குறைகளை நண்பர்களின் உதவி மூலம் தீரும். வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தன லாபங்கள் உண்டு. புதிய வியாபார முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நாள் முழுவதும் திருப்தியான நாளாகவும், நண்பர்கள் மூலம் நல்லவை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். கலைஞர்களுக்கு ஏற்றமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் கிடைக்கும். நீங்கள் எல்லா வேலைகளையும் கவனமாகச் செய்ய வேண்டும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த தனலாபங்கள் கைக்கு வந்து சேரும். நாள் முழுவதும் அலைச்சல்கள் இருந்தாலும், நண்பர்களின் மூலம் கிடைக்கக்கூடிய தொழில், வியாபார வாய்ப்புகள் உங்களுக்கு லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து தடைப்பட்ட வந்த வேலைகளில் வெற்றி கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவு தரக்கூடிய நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். நினைத்த காரியத்தில் வெற்றி அடையலாம். புதிய நண்பர்கள், பெரிய மனிதர்களின் நட்பு புதிய வாய்ப்புகளும், லாபத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கும். உங்கள் தனிப்பட்ட செலவுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டாம். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்தைப் பயன்படுத்தி உங்கள் வியாபாரத்தில் சில புதிய பணிகளை ஆராயத் தொடங்குவீர்கள்

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ராசியில் இருக்கும் சந்திரன், சுக்கிரன் உங்களுக்கு மன கிலேசத்தைத் தரக்கூடிய நாளாக இருக்கும். பெண்களுக்கு குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடல் நல பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவது நல்லது. இருசக்கர வாகன பயன்பாட்டாளர்கள் கவனமாக பயணிக்கவும்.பைரவர் வழிபாடு செய்வது நல்லது.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். படிக்கும் மாணவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு, வெளியூரில் வேலை, கல்வி தொடர்பான முயற்சியில் உள்ளவர்கள் அதில் வெற்றி கிடைக்கும். லாபகரமான நாளாக இருக்கும். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று விநாயகர் ஆலய வழிபாடு மன நிறைவை தரக்கூடியதாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும். நண்பர்களால் நன்மை ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் செல்வமும் பெருகும். நீங்கள் விரும்பிய ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன பாரங்கள் தீரக்கூடிய நாளாக இருக்கும். காலை வேளையில் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேர வாய்ப்புகள் உண்டு. புதன் கிழமையான இன்று பெருமாள் வழிபாடு, கருடருக்குத் தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்லது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. நிண்ட தூர பிரயாணங்கள் அனுகூல பலனை தரும். இன்று மாலை நேரத்தில் நண்பர்கள் மூலம் வெற்றிகள் வந்து சேரும். மனக்குறைகள் நீங்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று நண்பர்கள் மூலம் நன்மை கிடைக்கும். உங்கள் வணிகத்தின் சில குறிப்பிட்ட வேலைகளைப் பற்றி கவலைப்படலாம். பணத்தை முதலீடு செய்தால், அதிலிருந்து நீங்கள் பெரிதும் பயனடைவீர்கள்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலகம் சார்ந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு மிகவும் உகந்த நாளாக இருக்கும். சந்திராஷ்டம நாளாக இருந்தாலும் உங்களுக்கு நற்செய்திகளும், நல்ல பலன்களுக்கும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். விநாயகரை வழிபட்டு இந்த நாளை தொடங்க சாதக பலன்கள் உண்டாகும். பழைய நட்புகள் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன கவலை தீரக்கூடிய நாளாக இருக்கும். வழக்குகள், விசாரணைகளில் நண்பர்களின் உதவி கிடைக்கும். வண்டி, வாகன பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சந்திரன், சுக்கிரனின் சஞ்சாரத்தால் பெண்களுக்கு உயர்வு தரக்கூடிய நாளாகவும், வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்தோஷங்கள் கிடைக்கக்கூடிய நாள். காதல் வாழ்க்கையில் திருப்தி, சந்தோஷம் தரும். ராகுவின் அமைப்பால் உங்களுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படலாம். இன்று புதிய மனிதர்களின் சந்திப்பு நன்மையைத் தரும்.
பதவி உயர்வு கண்டு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் பேச்சுத்திறன் மூலம் கவலை தீரும்.

Leave A Reply

Your email address will not be published.