தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 108

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு இன்றைய நாள் மனநிறைவான நாளாக இருக்கும். மனதில் இருக்கும் சந்தோஷம் இரட்டிப்பாகும். நண்பர்கள் மூலம் இன்று உதவி கிடைக்கும். அது மன நிம்மதியை தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பைப் பேணுவதுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம்.

வழிபாடு : இன்று புதன் கிழமை மகாவிஷ்ணு வழிபாடு செய்யலாம்.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு இன்றைய நாளில் கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று ஏதேனும் ஒரு புதிய வேலையைத் தொடங்க நினைத்தால் அதற்கு நல்ல நாள் அமையும். வருமானத்தில் அதிகரிப்பு இருக்கலாம். குடும்பத்தில் பதற்றமான நிலை முடிவுக்கு வரும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும்.

வழிபாடு : ரிஷப ராசியினர் இன்று காலை விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபடவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

இன்று மிதுன ராசியினருக்கு இன்றைய நாள் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். வழக்குகள், விசாரணைகளில் வெற்றியும், சாதக நிலையும் உண்டு.வாழ்க்கைத் துணையின் வெற்றியால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.

பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்கு அதிகக் கடின உழைப்பு தேவை. தொழிலதிபர்கள் கடினமாக உழைத்து அதிக நன்மைகளையும் பெறுவார்கள். கடின உழைப்பின் சுப பலன்களையும் பெறுவீர்கள்.

வழிபாடு : மிதுன ராசியினர் இன்று அன்னதானம் மேற்கொள்வது நல்லது.

கடக ராசி பலன்

கடக ராசி பலன்

கடக ராசியினருக்கு இன்றைய நாள் முழுவதும் உற்சாகமான நாளாக இருக்கும். இருந்த போதிலும் இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் அதை ஒரு தடவைக்கு இருதடவை யோசித்து முடிவெடுக்கவும். அதிக வேலை அழுத்தம் இருக்கலாம். தங்கள் தொழிலில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு இன்றைய நாள் ஒரு குதுகலமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கை மலரும். வெற்றிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இன்று வழக்கு விசாரணைகள் இருப்பின் ஒத்திப் போடலாம்.உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சுற்றத்தாருடன் தகராறு தீர்க்க முயல்வீர்கள்.
வழிபாடு : இன்று சிவ ஆலய வழிபாடு செய்யவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினருக்கு இன்றைய நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். புதிய வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இன்று அரசு அலுவலகம் சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.அலுவலகத்தில் சில முக்கியமான வேலைகள் முடிக்க சிரமப்படுவீர்கள். அதனால் நீங்கள் கொஞ்சம் கவலை ஏற்படும். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன், வேலையை முடிக்க முயலவும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசியினருக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பண உதவி கைக்கு வந்து சேரும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இன்று சிலருக்கு உடல் ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் வரக்கூடும்.உடல் ரீதியான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு அதிகரிக்கும். வேலையில் தாமதம் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு வெற்றியைப் பெற்று மகிழ்வீர்கள்.
வழிபாடு : இன்று சிவ வழிபாடு செய்வது நன்மை தரும்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசியினருக்கு இன்றைய நாள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உங்களின் ஆரோக்கிய முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

இன்று புதிய நண்பர்களை நம்ப வேண்டாம்.இன்று தங்களின் ஒவ்வொரு பணியையும் செய்து முடிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். தாயாரின் உடல்நிலை கவலை தரும். பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு இன்றைய நாள் கடன் கொடுப்பது, வாங்குவது போன்ற விஷயங்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களின் இன்று எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் தவிர்க்க வேண்டியது நல்லது.

முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, முக்கிய நபர்கள், அதிகாரிகளை சந்திப்பது போன்ற விஷயங்களை இன்று மதியத்திற்கு மேல் செய்வது நல்லது. இன்று உங்களுக்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும்.வியாபாரத்தில் எந்த வேலையையும் கவனமாக செய்யவும். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசியினருக்கு இன்றைய நாள் முழுவதும் சற்று குழப்பம் இருக்கலாம். இருந்த போதிலும் இந்த நாள் மனதிற்கு நிறைவான நாளாக இருக்கும். மாலை நேரத்தில் விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நல்ல நாளாக இன்று அமையும்.

நீங்கள் விரும்பாவிட்டாலும் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நிதானமாக யோசித்த பிறகு எந்த முக்கிய முடிவையும் எடுப்பது அவசியம்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசி பலன்

கும்ப ராசியினருக்கு இன்றைய நாள் கடன் தொல்லை தீர்க்க நண்பர்களின் உதவி கிடைக்கும். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. இன்று தேவையில்லாத செலவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு வேலையை பொறுமையுடன் செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். திருமணத்தில் தடைகள் நீங்கும். இக்கட்டான விஷயங்களில் நண்பர்கள் உதவுவார்கள்.
வழிபாடு : பைரவருக்கு காலை வேளையில் தீபம் ஏற்ற மனதிற்கு திருப்திகரமாக இருக்கும்.

மீன ராசி பலன்

மீன ராசி பலன்

மீன ராசியினருக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தினருக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். மருத்துவ செலவுகள் குறையும்.

குழந்தைகளால் மன நிம்மதி கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் துறையில் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குழந்தை வழியில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.