Developed by - Tamilosai
மேஷம்

மேஷ ராசியிலேயே குரு அமர்ந்திருக்கக்கூடிய ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள், செல்வங்கள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேன்மையான பலன் கிடைக்கும். நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.
உடல் நலனில் மட்டும் அக்கறை தேவை. தொழில் சார்ந்த விஷயங்களில் லாபம் கிடைக்கும். மாணவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். பண வரவு சிறப்பாக இருந்தாலும், செலவு விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு ஆகஸ்ட் மாதத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் உடல் நிலையில் அக்கறை தேவை. ஆரோக்கிய குறைபாடு வேலையை செய்து முடிப்பதில் குறை ஏற்படும். சொத்து சார்ந்த விஷயங்களில் நிம்மதி குறைய வாய்ப்புள்ளது.
குடும்ப வாழ்க்கையில் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. தம்பதியிடையே நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். முதலீடு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பணியிடத்தில் கவனமாக செயல்பட்டால் மேன்மை உண்டு. மாணவர்கள் கல்வியில் அக்கறை தேவை.
மிதுனம்

மிதுன ராசியினருக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். நிதி விஷயங்களில் கவனம் தேவை. பங்கு சந்தை விஷயங்களில் நிபுணர்களின் நல்ல ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பயணங்கள் மூலம் அனுகூல பலன் கிடைக்கும்.
தொழிலில் புதிய யோசனைகள்,செயல்பாடு மேன்மை தரும். வல்லுநர்களின் ஆலோசனை சிறப்பான பலன் தரும்.
கடகம்

கடக ராசிக்கு ஆகஸ்ட் மாதத்தில் கடக பிரகாசமான பலன்கள் கிடைக்கும். உடல் நிலை பிரச்னைகள் காரணமாக உங்கள் செயல்களை செய்து முடிக்க கடினமான பிரச்னை ஏற்படலாம்.
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கோபத்தையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திச் செயல்படவும். உங்களின் நிதி நிலையில் மேன்மை பெற கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய மாதம். உங்கள் ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டியது இருக்கும்.
உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்.
பங்கு சந்தை, ஊக வணிகம் போன்ற விஷயங்களில் நஷ்டம் ஏற்படலாம் என்பதால் கவனத்துடன் செயல்படவும்.
கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய மாதம். கவனத்துடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி பெற்றிடலாம்.
கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் எந்த ஒரு நிதி விஷயங்களிலும் கவனம் தேவை. குறிப்பாக முதலீடு விஷயங்களில் வல்லுநர்களின் ஆலோசனை தேவை.
பணியிடத்தில் மோதல்களைத் தவிர்க்கவும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து செல்லவும். வணிகத்தில் கூட்டாளிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உடல் நலனில் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதம், மன அழுத்தம் தருவதாக இருக்கும்.
துலாம்

துலாம் ராசியினருக்கு பல வகையில் சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் சென்றால் அனைத்து வகையிலும் சாதகமான நாளாக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப தேவைகளை நிறைவேற்ற முடியும்.
பணியிடத்தில் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை அடைந்திடுவீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு லட்சியங்கள் உயரும். வேலை, தொழிலை மாற்றுவது தொடர்பாக, பதவி உயர்வு போன்றவை குறித்து நல்ல பலன் கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் நீங்கள் பொறுப்பாகவும், கவனமாகவும் கையாள்வது நல்லது.
உங்கள் துணையின் நல்லாதரவும், காதலும் மேலும் அதிகரிக்கும். உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளவும். உங்கள் மன வருத்தத்தை வெளிப்படுத்தினால் பிரச்னைகள் தீரும்.
தனுசு

தனுசு ராசிக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். அதே போல முதலீடுகள் மூலம் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்
குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். துணையுடனான புரிதல் சிறப்பாக இருக்கும். பொன்னான தருணங்கள் அமையும்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம், தொழிலில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய முடியும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் பெற வாய்ப்புள்ளது.
மகரம்

மகர ராசியினர் எந்த ஒரு வதந்திகள், பிரச்சினைகளிலிருந்து விலகி இருக்கவும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களின் வேலைகளை சிறப்பாக முடிக்க ஆற்றலை அதிகம் செலவிட வேண்டியது இருக்கும். உங்கள் வேலைகளை முடிக்க கண்ணும் கருத்துமாக செயல்படவும்.
எந்த ஒரு முதலீடு செய்யும் விஷயத்திலும் ஆராய்ந்து செயல்படவும். கடந்த கால முயற்சிகள், முதலீடுகள் உங்களுக்கு இப்போது சாதக பலனை தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சார்ந்த புதிய தொடக்கம் கிடைக்கும்.
கும்பம்

உங்கள் தொழிலை மேம்படுத்த புதிய திட்டங்கள் தீட்டி செயல்பட வேண்டிய மாதம். வேலைகளை உற்சாகமாகச் செய்து வெற்றி பெறுவீர்கள். உற்சாகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
தொழில், வியாபாரத்தில் சரியான நபர்களுடன் கூட்டு சேர்ந்தால் அதில் நல்ல முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். குடும்பத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த ஆதரவும், ஒத்துழைப்பு கிடைக்கும். முதலீடு செய்வதிலும், கடன் வாங்குதல் போன்ற விஷயங்களின் கவனமாக இருக்கவும்.
மீனம்

மீன ராசிக்கு ஆகஸ்ட் மாதத்தில் திறமைகளை வெளிப்படுத்தவும், நீங்கள் யார் என்பதை நிரூபிக்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை, தொழில் ஒன்றை தொடங்குவது குறித்து சாதக சூழல் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாகவும், திட்டமிட்டும் செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும்.
உறவுகள் விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்லவும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். திருமண உறவில் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகள் மூலம் நல்ல மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.