தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய நாளுக்கான ராசிபலன்

0 43
 • மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் நவீனயுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.
 • ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும்  நாள்.
 • மிதுனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா தியானத்தில் மனம் செல்லும். வியாபாரத்தில்அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்
 • கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
 • சிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்
 • கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி பழகுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
 • துலாம்: கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில்  மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
 • விருச்சிகம்:எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புதுஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள்கை ஓங்கும். சிறப்பான நாள்
 • தனுசு: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது  உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில்  சில முக்கிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்
 • மகரம்: கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நட்பு வட்டம் விரியும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்
 • கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்கள்  அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்
 • மீனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. தாயாரின் உடல் நிலை சீராகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.  வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்  ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில்  புது சலுகைகள்  கிடைக்கும்.  எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்
Leave A Reply

Your email address will not be published.