Developed by - Tamilosai
நாட்டில் இன்றைய தினமும், மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்கள் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் குறித்த வலயங்களில் மாலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், இன்றைய தினம் P முதல் W வரையான 8 வலயங்களில் மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.