தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய சிந்தனை துளிகள்

0 37
  1. சிக்கனமாக இல்லாமல் யாரும் செல்வந்தராக முடியாது. சிக்கனமாக இருந்தால் யாரும் வறியவராக முடியாது
  2. பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான் மனிதத் திறமையின் உச்சக்கட்டம்.
  3. எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் மூலம் வாங்கப்படுகின்றது.
  4. நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின் மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விட சந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை.
  5. நீ தனிமையாய் இருக்கும் போது வேலையின்றிச் சும்மா இருக்காதே! நீ வேலையின்றிச் சும்மா இருக்கும் போது தனிமையாய் இருக்காதே!
  6. வளத்தின் ஒரு கை உழைப்பு. ஒரு கை சிக்கனம்.
  7. போர் மனிதர்களை அழிக்கிறது, அதுபோல் ஆடம்பரம் மனிதாபிமானத்தையும், உடலையும், உள்ளத்தையும் அழிக்கிறது.
  8. திருமணம் என்பது ஆண், பெண் நட்பு. நம்பிக்கையில்லாமல் நட்பு வளராது. நம்பிக்கையோ நேர்மையில் இருந்து மலர்வது.
  9. அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.
  10. எண்ணங்களைச் சம்பவமாக்குவது அரசியல்.
Leave A Reply

Your email address will not be published.