தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய சிந்தனை துளிகள்

0 46

1. “கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.”

2. “புத்தகம் இல்லாத வீடு – ஆன்மா இல்லாத கூடு”

3. “எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு உண்டு.”

4. “தன் குற்றம் மறப்பதும் பிறர் குற்றம் காண்பதும் முட்டாள்தனத்தின் விஷேட குணம்.”

5. “ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை.”

6. “எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள்.. நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.”

7. “வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.. அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்.”

8. “சின்ன விசயங்களை கண், காது, மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும்.. ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும்.”

9. “கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி அதை தாமதப்படுத்துவது.”

10. “அதிஷ்டம் வீரனை கண்டு அஞ்சுகிறது.. கொலைகளை திணறடிக்கிறது.”

Leave A Reply

Your email address will not be published.