Developed by - Tamilosai
பாராளுமன்ற அமர்வு இன்று (10) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய “பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார பிரச்சினைகள்” தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.