Developed by - Tamilosai
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி கொழும்பில் இருந்து கண்டி மற்றும் கொழும்பில் இருந்து குருணாகலுக்கு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சொகுசு பேருந்துகள் மாத்திரமே இன்று இயங்கும் எனவும் போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இருந்து குருணாகல் வரை பயணிக்கும் பயணிகளிடமிருந்து 390 ரூபாவும், கொழும்பு – கண்டி பயணத்திற்கு 500 ரூபாவும் பயணிகளிடம் கட்டணமாக அறவிடப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 15-01-2022 அன்று ஜனாதிபதி மற்றும் மாண்புமிகு பிரதமர் அனுசரணையின் கீழ் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.