Developed by - Tamilosai
அதிபர்கள் – ஆசிரியர்கள் சங்கத் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முதல் புதிய விதத்தில் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இன்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் தினந்தோறும் கல்வி நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் சில ஆசிரியர்கள் கடமைக்குச் சமுகமளிக்காத போதிலும் ஏனையவர்கள் கடமைக்குச் சமுகமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.