தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று முதல் நாட்டின் எந்த பகுதிகளிலும் மின் தடை ஏற்படுத்தப்படமாட்டாது

0 133

இன்று முதல் நாட்டின் எந்த பகுதிகளிலும் மின்சார விநியோகத் தடை ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மின்பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வரும் தொழிற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் தொழிற்பாடுகள் வழமைக்கு திரும்பும் வரையில் நாட்டின் சில பிரதேசங்களில் மாலை 6 மணி முதல் 9.30 வரையான காலப்பகுதியில் அரை மணிநேரம் மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படுத்தப்பட்டு வந்தது.

எனினும், இன்று மின்சாரத் துண்டிப்பு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.