தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று முதல் தினமும் மின் வெட்டு

0 418

இன்று முதல் நாளொன்றுக்கு இரண்டு முறை மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி பிற்பகல் 02.30 மணி முதல் 06.30 மணி வரை ஒரு மணித்தியாலமும், மாலை 06.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை 45 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால், அடுத்த மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு இடம்பெறாது என இரு தினங்களுக்கு முன்பு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.
தேசிய மின் கட்டமைப்பானது எரிபொருள் பற்றாக்குறையால் சுமார் 500 மெகாவோட் திறனை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave A Reply

Your email address will not be published.