Developed by - Tamilosai
பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு 9 விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயத்தை புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
இன்று அதிகாலை 12.40 மற்றும் இரவு 9 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரத்திற்கு 2 விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.