Developed by - Tamilosai
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஐந்து அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரண பொதியொன்றை 1, 950 ரூபாவுக்கு இன்று 9 ஆம் திகதி முதல் சதொச விற்பனை நிலையங்களில் பாவனையாளர்கள் கொள்வனவு செய்யலாம் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டரிசி, சம்பா அரிசி 5 கிலோ வீதமும், ஐலன்ட் பால்மா 400 கிராம் பக்கெட் ஒன்றும் ஒரு கிலோ சிவப்பு சீனியும் மற்றும் 400 கிராம் தேயிலை பக்கட் ஒன்றும் இந்தப் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.இந்த பொதியை கொள்வனவு செய்பவர்கள் 700 ரூபாயை மிச்சப்படுத்தலாம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.