Developed by - Tamilosai
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத் தொடர் இன்று நடைபெறவுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் வருடாந்த அறிக்கையுடன் அமர்வு ஆரம்பமாகவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போதே சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையுடனான சிறிலங்காவின் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கு அமைவாக அமைச்சர் பீரிஸின் உரை அமையும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்தள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சின்ஜியாங், சீனா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளின் விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.