தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று அலைமோதிக் கொண்ட கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்

0 76

நீண்ட வார இறுதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் சொந்த இடங்களுக்கும், நகர்ப்புற மக்கள் விடுமுறையைக் கழிக்கவும் தூரப் பிரதேசங்களுக்குச் செல்வதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பெருமளவான மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது.

ஏராளமானோர் புகையிரதத்தில் ஏறிக்கொள்ள முடியாமல் போன நிலையில் புகையிரத நிலைய அதிபரை சந்தித்து தங்கள் பயணச்சீட்டுகளின் கட்டணத்தை மீளத் தருமாறு வற்புறுத்தியதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வழக்கமான மக்கள் கூட்டத்தை விட சுமார் ஐந்து மடங்கு அளவிலான மக்கள் கூட்டம் இன்று புகையிரத நிலையத்தில் நிரம்பி வழிவதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.