Developed by - Tamilosai
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) காலை வரையிலும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கின்றமையை சமூக ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் நேற்று இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இளைஞர்கள் யுவதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.