Developed by - Tamilosai
தொடர்ந்து 6ஆவது நாளாக இன்றும் (13) நாட்டில் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பலை இதுவரை விடுவிக்க முடியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி இன்றுடன் சேர்த்து குறித்த கப்பலுக்கு 06 நாட்கள் தாமத கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.