தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இனவாதம், மதவாதத்தைத் தூண்டி மக்களை ஏன் குழப்புகின்றனர்? யாழில் விதுர கேள்வி

0 93

 யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (06-11-2021) இடம்பெற்றது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாண கலைஞர்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்தனர்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கலைஞர்களுக்கான கலைஞர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் தற்போதய சூழ்நிலை காரணமாக வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு அரசாங்கத்தின்  உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம் இனி அரசாங்கத்தின்  உதவித் திட்டங்களின் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் கலைஞர்களால் இராஜாங்க அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.

கலைஞர்களுடனான குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அநுர மானதுங்க, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நிசாந்தினி ஜெயசிங்க, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இக்கலந்துரையாடலின் பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்;

இதன்போது நேற்றையதினம் காரைநகரில் குழப்பம் ஒன்று இடம்பெற்றமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

குறித்த கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கினார். 

´´நேற்றைய தினம் காரைநகரில் அமைச்சரை விரட்டியடித்த மக்கள் என பத்திரிகை ஒன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றது, இனவாதம், மதவாதத்தைத் தூண்டி மக்களை ஏன் குழப்புகின்றனர் என்று எனக்குத் தெரியவில்லை.

நான் நேற்றைய தினம் காரைநகருக்கு விஜயம் செய்த போது அங்கே கூறியிருக்கின்றார்கள். அமைச்சர் ஒருவர் வருகிறார் இங்கே விகாரை கட்டுவதற்காக என்று. ஏன் அவ்வாறு பொய் கூறுகின்றார்கள். 

இவ்வாறு மீண்டும் மதவாதம், இனவாதத்தைத் தூண்டி சாதாரண மக்களை பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றனர்.

நேற்றைய சம்பவத்திற்கு பின்னணியில் ஒரு அரசியல் உள்ளது என்பதை நான் உணருகின்றேன்´´ எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.