Developed by - Tamilosai
எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு குறைவாகவும், சம்பா அரிசி 1 கிலோ 130 ரூபாவுக்கு குறைவாகவும் வழங்கப்படும் என்று வர்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.
சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அரசாங்க விற்பனை நிலையங்களினூடாக, இந்த விலை அடிப்படையில் அரிசியை பொது மக்களால் கொள்வனவு செய்ய முடியும் என்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.