Developed by - Tamilosai
போர்க் காரணமாக வடக்கு, கிழக்கின் பொருளாதாரம் 35வருடம் பின்தங்கியுள்ளது, எனினும் அரசாங்கம் அதனை கவனிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
போர் முடிந்த போதும் ஏனைய பகுதிகளைப் போல வடக்கு, கிழக்கு பகுதிகள் பார்க்கப்படுவதில்லை.
கோவிட் பாதிப்பை எடுத்துக்கொண்டால், ஏனைய பகுதிகளைக் காட்டிலும் 10 மடங்கு பாதிப்பு வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் மீன் பிடி மற்றும் விவசாயத்துறை திட்டமிட்டு மீன்பிடித்துறை அழிக்கப்பட்டது.
ஏனைய பகுதிகளில் இருந்து வடக்கு, கிழக்குக்கு அத்துமீறி வரும் மீனவர்களை கடற்படை பாதுகாக்கிறது.இந்தியாவில் இருந்து வரும் மீனவர்களை அனுமதிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைச் சுட்டிக்காட்டினால் அது இனவாதம் என்று கூறப்படுவதாக அவர் தொிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பில் கடந்த பாதீட்டிலும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இந்த பாதீட்டிலும் அதுவே இடம்பெற்றுள்ளது.
சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் ஏனைய இனத்தவர்களை எதிரிகளாகவே நடத்தியுள்ளன.சிங்கள பௌத்த நிலைப்பாட்டையே வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த போதும் எந்த அரசாங்கமும் எதனையும் சாதிக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் நாடு வீழ்ச்சியடைந்தே வருகிறது என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
எனினும் இப்போதும் கூட இலங்கையின் தலைவர்கள் பழையதை நினைத்துப்பார்க்கவில்லை.
ஒற்றையாட்சியின் மூலம் கடந்த 74 வருடங்களாக நாடு அழிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை வரவழைப்பதற்கு அரசாங்கம் இன்னும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனரீதியான சுயநல செயற்பாடு காரணமாக இன்று நாட்டின் பகுதிகளில் ஏனைய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
சமஸ்டி என்பது பிரிவினையாகாது.இந்தநிலையில் 74 ஒற்றையாட்சியின் மூலம் எதனையும் இலங்கையின் அரசாங்கங்கள் சாதிக்கவில்லை. மாறாக பிரிவினைப் போர் ஒன்றையே உருவாக்கமுடிந்தது.
இதனை பாா்க்கும்போது நாட்டு தலைவா்கள் வெட்கப்படவேண்டும்.
நாட்டின் தலைவா்கள் தமது பிள்ளைகளி்ன் எதிா்காலத்தை நினைத்து செயற்படுகிறாா்களா? என்று தமது இதயங்களில் கை வைத்து சொல்லவேண்டும் என்றும் கஜேந்திரகுமாா் குறிப்பிட்டார்.
இந்த நாடு சிங்கள பௌத்தா்களுக்குாிய நாடு என்ற கொள்கைக் காரணமாக, எல்லோரும் ” இந்த நாடு தமது நாடு” என்று கூறும் நிலையை இந்த ஒற்றையாட்சியின் மூலம் ஏற்படுத்தமுடியவில்லை.
இந்தநிலையில் பூகோள அரசியல் யதாா்த்தம் , வலிமைமிக்க சா்வதேச சக்திகள், இலங்கையை ஒரு அலகாக பாா்க்கமுடியாது என்ற நிலையை ஏற்படும்போது, இலங்கையில் பிரிவினை ஏற்படுத்தப்படும்.
எனவே 75 வீத மக்கள் தற்போது தொடா்ந்தும் 74 வருட கால கடந்து வந்த பாதையில் செல்லவேண்டுமா? என்பதை தீா்மானிக்கவேண்டும் என்று கஜேந்திரகுமாா் கோாிக்கை விடுத்தார்.