தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்த அரசாங்கம் வீழ்வது நிச்சயம்; மக்களை அணிதிரள அழைப்பு

0 149

கோட்டாபய அரசாங்கம்  வீழ்வது நிச்சயம். எனவே, அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் அறைகூவல் விடுத்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து பொகவந்தலாவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பளம் இன்னும் முறையாக – முழுமையாகக் கிடைக்கவில்லை.
சம்பளப் பிரச்சினை ஒருபுறம்.

மறுபுறத்தில் விலையேற்றம் என்று தாங்க முடியாத சுமை. சமையல் எரிவாயு, பால்மா மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. 
இதனால் வாழ்க்கைச் சுமையும் அதிகரித்துள்ளது.

ஆசிரியர்கள், மின்சார சபை ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் என அனைவரும் இன்று வீதிக்கு இறங்கிவிட்டனர். 
யார் வேண்டுமானாலும் எப்படியும் பொருட்களை விற்கலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

எது எப்படியிருந்தாலும் இந்த ஆட்சி வீழ்வது உறுதி. நல்லதொரு அரசாங்கத்தை உருவாக்க மக்கள் அடுத்த தேர்தலுக்குத் தயாராக வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.