Developed by - Tamilosai
இந்தோனேஷியாவின் பாலி தீவில் இன்று(16) முற்பகல் இடம்பெற்ற நில அதிர்வில் மூவர் பலியாகியுள்ளனர்.
தீவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிரியூட் ஆக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வினால் பல்வேறு கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
கொவிட்-19 பரவல் காரணமாக ஒன்றரை வருட காலமாக மூடப்பட்டிருந்த பாலி தீவு, சுற்றுலா துறைக்காக நேற்று முன்தினம் மீளத் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.