Developed by - Tamilosai
கொவிட் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய முதல் 5 நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்குவதாக இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பிராந்திய நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளன.
இது எமது நாட்டுக்கு பெருமையாகும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அதேபோன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் 3 இலட்சம் இலங்கையர்கள் தொழில் புரிவதாகவும், அதற்கும் மேலதிகமாக மேலும் பல இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகவும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதாவும் அமைச்சர் கூறினார்.