Developed by - Tamilosai
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.”இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போது இலங்கை அரசுடன் கூட்டமைப்பு ஆரம்பித்துள்ள பேச்சு உட்பட முக்கிய சில விடயங்களை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்போதே பேச்சை தொடருமாறு அவர் ஆலோசனை வழங்கினார்.
அடுத்த சுற்று பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்னர் அரசால் செய்ய வேண்டிய நான்கு விடயங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச தரப்பில் தமக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பினரிடம் குறிப்பிட்டுள்ளார்.