தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்திய மீனவர்கள் அத்துமீறல்; வடக்கில் ஆரம்பமானது மீனவர் போராட்டம்!

0 96

 இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து முன்னெடுக்கும் பாரிய கண்டனப் போராட்டமானது ஆரம்பமாகியுள்ளது.

இன்று (17-10-2021) காலை 7 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ள மீனவர்களின் போராட்டமானது படகுகளில் பருத்தித்துறை நோக்கி செல்கின்றது.

இழுவைப்படகு தடைச்சட்டத்தை அமுல்படுத்தக் கோரி இன்று முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான படகுப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

கடல் வளத்தினையும், நீரியல் வளத்தினையும் மிகமோசமாக அழிக்கும் இழுவைப் படகுகளைத் தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் இந்தச் சட்டத்தை அமுல்படுத்தாத காரணத்தினால் இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக கடல்வளத்தினை அழிக்கும் நிலமை தொடர்ந்து வருகின்றது.

இதனை முறையாக அமுல்படுத்த இலங்கையின் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சரை கோரும் முகமாகவே குறித்த கடல்வழி படகு பேரணி இடம்பெறுகிறது.

இதேவேளை, குறித்த படகு பேரணிக்கு பலவேறு அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கி அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த மீனவர் பேரணியில் மீனவர்களுடன் அரசியல் பிரமுகர்களும் இணைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.