தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்திய மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் எச்சரிக்கை

0 282

 சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக பொலிஸார் அந்நாட்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

த ஹிந்து பத்திரிகையில் இது தொடர்பில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

கச்சதீவுப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய – இலங்கை மீனவர்களிடையே முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில், இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இந்திய – இலங்கை மீனவர்களுக்கு கச்சதீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அனுமதி வழங்க வேண்டும் என இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இயந்திரப் படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.