Developed by - Tamilosai
உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் போன்ற முக்கிய உலகத் தலைவர்களை பின் தள்ளி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான Morning Consult வெளியிட்ட உலகளாவிய தலைவர்களின் தரவரிசைப் பட்டியலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 13 உலகத் தலைவர்களின் பட்டியலில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 41 சதவீத மதிப்பீட்டில் ஆறாவது இடத்தில் உள்ளார்.
அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் 41 சதவீதத்துடன் எட்டாவது இடத்தையும், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.